close
Choose your channels

'தளபதி 65' நாயகியின் சம்மர்கால கிளாமர் புகைப்படம்: 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்! 

Friday, April 30, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 65’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னை திரும்பியுள்ள படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோயர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் சம்மர்கால கிளாமர் உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் கேலியும் கிண்டலுமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன. அதுமட்டுமின்றி இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பூஜா ஹெக்டே தமிழில் ’தளபதி 65’ படத்தில் நடித்து வருவது மட்டுமின்றி தெலுங்கில் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz