முதல்கட்ட படப்பிடிப்பே வெளிநாட்டில்.. தளபதி 65' படத்தின் சூப்பர் அப்டேட்!
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படமான ’தளபதி 65’ திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. ’கோலமாவு கோகிலா’ மற்றும் ’டாக்டர்’ படங்களை அடுத்து நெல்சன் இயக்க இருக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் ‘பேட்ட’ வில்லன் நவாசுதின் சித்திக் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பதும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
‘தளபதி 65’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பே ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படம் அரசியல் கலந்த ஒரு ஜனரஞ்சக பொழுதுபோக்கு கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறதால், இந்த புதிய அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.