close
Choose your channels
Don
Nenjukku Needhi

நள்ளிரவில் சென்னையை வலம் வந்த 'தளபதி 62' குழுவினர்

Wednesday, May 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நள்ளிரவில் சென்னையை வலம் வந்த தளபதி 62 குழுவினர்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட விஜய் மற்றும் சுமார் 100 மாணவர்கள் இரவில் சென்னையை பைக்கில் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளை 'தளபதி 62' படக்குழுவினர் எடுத்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுடன் விஜய் சென்னையை பைக்கில் ஊர்வலமாக வலம் வந்த காட்சியும் படத்தில் மிக்ஸ் செய்யப்படும் என்றும், இந்த பைக் ஊர்வல காட்சி படத்தின் மிக முக்கிய காட்சிகளில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.