close
Choose your channels
aranmanai

கண்டிப்பா உன் கதைய முடிச்சிடுவா.. தோனியின் 'எல்.ஜி.எம்' 'லவ்டுடே' பாணி படமா?

Wednesday, June 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனி தயாரிக்கும் முதல் திரைப்படமான ‘எல்.ஜி.எம்’ என்ற படத்தின் டீசர் இன்று வெளியாகும் என ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா காதல் ஜோடியாக நடித்திருக்கும் இந்த படம் கிட்டத்தட்ட ’லவ் டுடே’ பாணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 49 வினாடிகள் உள்ள இந்த டீஸரில் உள்ள காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்ஜே விஜய் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்து இயக்கியுள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி இருவரும் ’எல்ஜிஎம்’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment