close
Choose your channels
Rocketry
Yaanai

'தல' அஜித் பிறந்த நாளில் 'தல' தோனி எடுத்த அதிரடி முடிவு!

Sunday, May 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் பிறந்தநாள் தல தோனி எடுத்த அதிரடி முடிவை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை மொத்தம் 44 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஐபிஎல் தொடர் ஆரம்பமானது முதல் கடந்த ஆண்டு நடைபெற்ற தல தோனி தான் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு மட்டும் ஜடேஜாவை கேப்டனாக்கி தோனி அழகு பார்த்தார்.

இந்த நிலையில் கேப்டன்ஷிப் பொருப்பை ஏற்றதில் இருந்து ஜடேஜா தன்னுடைய பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை என்றும், கேப்டன்ஷிப் என்ற மன அழுத்தம் அவருடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு தடையாக இருந்ததாக கூறப்பட்டது.

எனவே ஜடேஜா மீண்டும் தல தோனியிடம் கேப்டன்ஷிப் பொருப்பை கொடுக்க முன் வந்ததாகவும் அதனை தோனியும் ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

எனவே இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தல தோனி கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தல அஜித் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் தல தோனி மீண்டும் தோன்றும் கேப்டன் பொருப்பை ஏற்கவுள்ளது எதிர்பாராத ஒரு ஒற்றுமையாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.