close
Choose your channels
iruttu
Capmaari

தல 57' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Wednesday, October 5, 2016 • தமிழ் Comments

தல அஜித் நடித்து வரும் 57வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
 
இந்நிலையில் இதுவரை வில்லன் யார் என்று முடிவு செய்யப்படாமலே படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது படக்குழுவினர் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை இந்த படத்தின் வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் '2.0' படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அஜித்தின் தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும், இந்த தோற்றம் அஜித் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz