close
Choose your channels

பாலைவனத்தில் பைக்கில் பயணம்: தல அஜித்தின் வைரல் புகைப்படம்!

Sunday, October 24, 2021 • தமிழ் Comments

தல அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு பக்கம் அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் உலகம் சுற்றும் வாலிபனாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜித் பைக்கில் பயணம் செய்யக் கிளம்பினார் என்பதை பார்த்தோம்.

ஏற்கனவே அவர் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் ரசிகர்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேபாளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்த அஜித், தற்போது பாலைவனப் பகுதியில் பைக் பயணம் செய்துள்ளார். அங்கு அவர் பைக்கை நிறுத்திவிட்டு பைக்கின் நிழலில் உட்கார்ந்து தண்ணீர் கொடுக்கும் காட்சியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அஜீத்தின் பைக் பயணம் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளார் என்பதும் சமீபத்தில் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பதும் பார்த்தோம்.

இந்த நிலையில் அஜித்தின் இந்த பைக் பயணம் முடிந்ததும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz