close
Choose your channels
RaRa

தல அஜித் - சத்யஜோதி இணையும் திரைப்படத்தின் இயக்குனர் இவரா? கோலிவுட்டில் ஆச்சர்யம்!

Monday, August 2, 2021 • தமிழ் Comments

தல அஜித் நடித்துவரும் 60வது திரைப்படம் ’வலிமை’ என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் தல அஜித்தின் 61-வது திரைப்படத்தையும் எச் வினோத் தான் இயக்கப் போகிறார் என்பதும் போனிகபூர் தான் தயாரிக்கப் போகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பதும் கிட்டத்தட்ட உறுதியான தகவல் ஆகும்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தல அஜித்தின் 62 வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். ஏற்கனவே ’விவேகம்’ மற்றும் ’விஸ்வாசம்’ ஆகிய படங்களை தயாரித்துள்ள சத்யஜோதி நிறுவனம் மீண்டும் தல 62 படத்தை தயாரிக்க இருப்பது கோலிவுட் திரையுலகினர் களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. ’தல 62’ படத்தை இயக்க சுதா கொங்கராவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே சூரரைப்போற்று திரைப்படத்தை தற்போது இந்தியில் இயக்க உள்ள சுதா கொங்கரா, அந்த படத்தை முடித்துவிட்டு தல அஜித்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz