close
Choose your channels

கலைஞரை போல் கலைத்துறையில் கவனம் செலுத்துங்கள்: ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர் தாணு வாழ்த்து!

Monday, May 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று இன்னும் ஒரு சில நாட்களில் பதவி ஏற்க உள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்து உள்ளது என்பதும் திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முதல்வராகப் பொறுப்பு ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார், அவர் தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது:

அரைநூற்றாண்டு பொது வாழ்வில்‌ கலைஞரின்‌ பாடசாலையில்‌ பயின்று சிறந்த மாணவராக தோசச்சி பெற்று கடந்த காலங்களில்‌ கட்சித்‌ தலைமையையோ ஆட்சித்‌ தலைமையையோ கேட்டு பெறாமல்‌ கலைஞர்‌ ஆசியுடன்‌ மக்கள்‌ தந்த மாநகர மேயர்‌, துணை முதல்வர்‌, உள்ளாட்சியில்‌ நல்லாட்சியை தந்து ஏற்ற பொறுப்புகளிலெல்லாம்‌ மிகச்‌ சிறப்பான நிர்வாகம்‌ தந்து, ஒட்டு மொத்த தமிழகத்தின்‌ பாராட்டை பெற்றீர்கள்‌.
மீண்டும்‌ ஆட்சியை பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாக “நமக்கு நாமே”, “ஒன்றிணைவோம்‌. வா” திட்டங்கள்‌ மூலம்‌ நம்‌ தாய்‌ மண்ணில்‌ உங்கள்‌ பாதங்கள்‌ தடம்‌ பதிக்காத இடங்களே இல்லை எனும்‌ அளவில்‌ பயணம்‌ செய்து மக்களின்‌ மனங்களை வசப்படுத்தி அதீத அன்பால்‌ சாத்தியப்படூத்தி விட்டீர்கள்‌. மாநிலம்‌ தழுவிய கிராமசபைக்‌ கூட்டங்களை நடத்தி மக்களிடம்‌ மனுக்களை பெற்று அதன்‌ தீர்வுக்காக தனி அமைச்சகமும்‌, உயர்‌ அதிகாரிகளை நியமிக்க இருப்பதை காண உலகமே உங்களை உற்று நோக்கி காத்திருக்கிறது. கலைஞருக்கு பிறகு கழகத்துக்கு தலைமை ஏற்று கட்சியை கட்டமைத்து, ஒருங்கிணைத்து திறம்பட நடத்தி பெருந்தொற்று காலத்திலும்‌ மேற்கொண்ட பயணங்களால்‌ தமிழக மக்கள்‌ மகத்தான வெற்றியை தந்திருக்கிறார்கள்‌. கலைஞரைப்‌ போன்று கலைத்துறையிலும்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி அந்தத்‌ துறையை மிகச்‌ சிறப்பாக செயல்பட வழி வகுத்துத்‌ தாருங்கள்‌.

கூட்டணி அமைப்பதிலும்‌ கட்சித்தலைவர்களை சந்திக்கும்‌ போதும்‌, கருத்து, பரிமாற்றங்கள்‌ நிகழும்‌ போதும்‌ கடுஞ்சொற்கள்‌ பயன்படுத்தியதாக யாரிடமிருந்தும்‌ எந்த தகவலும்‌ இதுவரை வெளிவரவில்லை. இதுவே உங்கள்‌ ஆளுமையின்‌ ஆழத்தை மிக அழகாக அற்புதமாக அரங்கேற்றி வருகிறது. தமிழக மக்களின்‌ உணர்வுகளை நெடிய பயணத்தில்‌ கண்ட நீங்கள்‌, ஆட்சிப்‌ பணிகளில்‌ மூத்த அதிகாரிகளின்‌ துறைசார்ந்த நிர்ணயத்துவத்தை பயன்படுத்தி உங்கள்‌ தலைமை சிறக்க கடந்த காலத்தில்‌ நீங்கள்‌ செயல்பட்டதை அறிந்தவர்கள்‌ இன்றும்‌ பாராட்டி மகிழ்கின்றனர்‌. உங்களின்‌ கடின உழைப்பு, மனங்கவரும்‌ வியூகங்கள்‌ திமுகவுக்கு தனிபெரும்பான்மையையும்‌, கூட்டணிக்கு அறுதிப்பெரும்பான்மையையும்‌ பெற்று தமிழக மக்களின்‌ லட்சிய பிம்பமாக, தமிழக இளைஞர்களின்‌ சுடரொளியாக வெளிச்சம்‌ பாய்ச்சி கலைஞரின்‌ பொற்க்கால தமிழகத்தை மீட்டெடுத்து வருங்கால தலைமுறைக்கான தலைவரென முத்திரை பதிக்க வேண்டுகிறேன்‌.

இவ்வாறு கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தனது வாழ்த்து அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.