close
Choose your channels

பிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்

Saturday, July 4, 2020 • தமிழ் Comments

தமிழகம் உட்பட இந்தியா முழுவதையும் ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் பதவியில் இருப்பவர்ளையும், திரையுலகினர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. திரையுலகைச் சேர்ந்த ஒருசிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் போக்குரி ராமராவ். இவர் தனது சகோதரர் பாபு ராமராவுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் போக்குரி ராமராவுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவர், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்துள்ளன. இதனால் தெலுங்கு திரையுலகமே பெரும் அதிர்ச்சியில் உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மரணமடைந்தது தெலுங்கு திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz