close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சர்ச்சை நடிகை? அஜித், சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!

Friday, August 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படும் என்று செய்தி வெளியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி, விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன், சூப்பர் சிங்கர் பாடகி ராஜலட்சுமி, விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி உள்பட ஒருசிலர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி சின்னத்திரை தொலைக்காட்சி நடிகை ஸ்ரீநிதி பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் வெளியானபோது அந்த படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் அஜித் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதேபோல் சிம்புவை திருமணம் செய்து கொள்ள தயார் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஸ்ரீநிதி பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஸ்ரீநிதி கலந்து கொண்டால் அவரை வச்சு செய்வோம் என சமூக வலைதளங்களில் அஜித், சிம்பு ரசிகர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.