close
Choose your channels
Por
Joshwa

'கார்த்தி 27' படத்தின் நாயகி பிரபல சீரியல் நடிகையா? அடித்தது அதிர்ஷ்டம்..!

Friday, November 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிக்க இருக்கும் 27 வது திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ’96’ என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம்குமார், கார்த்தி நடிக்க இருக்கும் 27வது படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் ’ஈரமான ரோஜாவே’ என்ற சீரியல் நடிகை சுவாதி, நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உட்பட பல சீரியல் நடிகைகள் வெள்ளி திரையிலும் ஜொலித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சீரியல் நடிகை வெள்ளி திரைக்கு வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முதல் படமே கார்த்தியுடன் ஜோடி என்பது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

பிரேம்குமார் இயக்கத்தில், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.