close
Choose your channels
IKK
Jail

ஜும் மீட்டிங்கில் ஆசிரியர் செய்த சேட்டை… கதிகலங்கிபோன நிர்வாகிகள்!

Monday, October 11, 2021 • தமிழ் Comments

கொரோனா நேரத்தில் ஜும் மீட், கூகுள் மீட் போன்றவையே பலருக்கும் கதி என்றாகிவிட்டது. கல்வி சார்ந்த வகுப்புகளும் இங்குதான் நடக்கின்றன. அலுவலகம் சார்ந்த கூட்டங்களும் இங்குதான் நடக்கின்றன. இந்தக் கூட்டங்களில் நடக்கும் சில சுவாரசியமான சம்பவங்கள் அவ்வபோது வைரலாகி விடுகிறது.

அந்த வகையில் ஜமைக்கா நாட்டில் ஆசிரியர் கூட்டமைப்பு மாநாடு ஒன்று ஜும் மீடிங்கில் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஆசிரியர் ஒருவர் “கொரோனா நேரத்தில் ஆசிரியர் பணி செய்வதே கடினமாகிவிட்டது“ எனப் புலம்பிக் கொண்டிருக்க கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற அனைவரின் கவனமும் வேறொரு வீடியோவில் குவிந்திருக்கிறது.

அதாவது கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர், தான் வீடியோ பட்டனை ஆன் செய்தது கூட தெரியாமல் தனது பார்னருடன் மும்மரமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதை மீட்டிங்கில் கலந்து கொண்ட அனைவரும் அதிர்ச்சியோடு பார்த்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கவனித்த நிர்வாகிகள் அதிர்ந்துபோய் கூட்டத்தை வேறொரு நாளுக்கு மாற்றி வைத்துள்ளனர். இதனால் அந்த ஆசிரியர் பின்பு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஆசிரியர் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது பற்றி நிர்வாகிகள் கடும் வருத்தம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz