close
Choose your channels

ஷாருக்கானுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி: பரபரப்பு தகவல்

Wednesday, September 16, 2020 • தமிழ் Comments

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் அடுத்த படத்தை அட்லி இயக்குவதாக தகவல்கள் வெளி வந்தாலும் தற்போதைய நிலவரப்படி ஷாருக்கானின் அடுத்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி என்பவர்தான் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி-ஷாருக்கான் இணையும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்க இருப்பதாக தெரிகிறது.

தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்பதும், தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படம் உள்பட 6 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி முதல் முறையாக நடிக்க இருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz