close
Choose your channels
iravin_nizhal
warrior

சி.எஸ் அமுதன் - விஜய் ஆண்டனி படத்தில் த்ரில் டைட்டில் அறிவிப்பு!

Sunday, January 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தமிழ்ப்படம்’ மற்றும் ’தமிழ்ப்படம் 2’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ் அமுதன்இயக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் த்ரில் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ’தமிழ்ப்படம்’ என்ற திரைப்படத்தையும் 2018 ஆம் ஆண்டு ’தமிழ்ப்படம் 2’ என்ற திரைப்படத்தையும் இயக்கியவர் இயக்குனர் சி எஸ் அமுதன் என்பதும் இவர் இயக்கிய ’ரெரண்டாவது படம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் இந்த படத்தின் டைட்டில் ’ரத்தம்’ என வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இன்பினிடி பிலிம் வென்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’தமிழ்ப்படம் 2’ திரைப்படத்தில் பணிபுரிந்த இசை அமைப்பாளர் கண்ணன் மற்றும் எடிட்டர் டி எஸ் சுரேஷ் ஆகியோர் இந்த படத்திலும் பணிபுரிகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.