close
Choose your channels
PKK

ஏ.ஆர்.ரஹ்மானின் துபாய் ஸ்டுடியோவில் தமிழக முதல்வர்: வைரல் புகைப்படங்கள்

Saturday, March 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துபாயில் உள்ள ஏஆர் ரகுமானின் இசை ஸ்டூடியோவுக்கு சென்றுள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார் என்பதும் அவர் தமிழகத்திற்கு முதலீட்டை கொண்டு வர முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் இசை ஸ்டுடியோ ஒன்றை அமைத்திருந்த இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தனது ஸ்டுடியோவுக்கு வருகை தரும்படி முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வரும் நிலையில் தமிழக முதல்வர் தனது அழைப்பை ஏற்று ஸ்டூடியோவுக்கு வந்து சிறப்பித்ததற்குக்கு நன்றிகள் என ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிரமில் தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வருடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோரும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கு சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.