close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

இந்த தமிழ் படத்தின் ஆடியோ விழாவில் முதல்வர் கலந்து கொள்கிறாரா?

Tuesday, August 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு தயாராகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 8ஆம் தேதி தெலுங்கு ஆடியோ மற்றும் டிரைலர் விழா நடைபெறும் என்றும் இதில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

பான் - இந்தியத் திரைப்படமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.