close
Choose your channels
Viruman
Laal

ஷாருக்கானின் அடுத்த படத்தில் இணையும் தமிழ் இசையமைப்பாளர்!

Tuesday, April 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும், ‘டங்க்கி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த படத்தில் இசையமைக்க ஜீவி பிரகாஷ் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘ஜோக்கர்’, ‘அக்லி’ ஆகிய பாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ், சமீபத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படத்திற்கும் இசை அமைக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் ஷாருக்கான் படத்திற்கும் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்தும் இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ், இனி பாலிவுட்டிலும் பிஸியாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.