close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

டுவிட்டருக்கு வந்த மாஸ் தமிழ் நடிகர்: முதல் நாளே கிடைத்த 'வெரிஃபைட்'

Friday, August 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர் டுவிட்டருக்கு வந்த நிலையில் ஒரு டுவிட் கூட பதிவு செய்யப்படாத நிலையில் முதல் நாளே அந்த டுவிட்டர் பக்கத்திற்கு ‘வெரிஃபைட்’அந்தஸ்து கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலக மாஸ் நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம் என்பதும் அவர் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்டு 31ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சியான் விக்ரம் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். அவருடைய டுவிட்டர் பக்கம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் ஒரு சில மணி நேரங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் இணைத்துள்ளனர் என்பதும் அதுமட்டுமின்றி முதல் நாளே ட்விட்டர் நிறுவனம் அவருடைய பக்கத்திற்கு வெரிஃபைட் அந்தஸ்து வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விக்ரம் டுவிட்டரில் இணைந்ததை அடுத்து, அவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.