close
Choose your channels
Viruman
Laal

பிரபல தமிழ் இயக்குனரின் இயக்கத்தில் தல தோனி: மாஸ் அறிவிப்பு

Sunday, February 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனி எனது இயக்கத்தில் நடிக்க இருக்கும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று பிரபல இயக்குனர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து தோனி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன் என்பதும் சிம்பு நடித்த ‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அதன்பின்னர் ’நானும் ரவுடி தான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும் தெரிந்ததே. தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எனது ரோல்மாடல் தல தோனியை சந்தித்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும், எனது இயக்கத்தில் தோனி நடிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பதிவு செய்துள்ளார். அனேகமாக தோனி நடிக்கும் விளம்பர படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனியின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவன் அவர் நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதனை அடுத்து தல ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.