close
Choose your channels
aranmanai

மிஸ் யுனிவர்ஸ் அழகியுடன் தேசிய கொடியை கையில் பிடித்திருக்கும் தமிழ் பட நடிகை!

Wednesday, December 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற அழகியுடன் பிரபல நடிகை ஒருவர் தேசிய கொடியை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

கடந்த 2000-ம் ஆண்டு லாரா தத்தா என்பவர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றதை அடுத்த 21 ஆண்டுகளுக்கு பிறகு ஹர்னாஸ் சந்து என்ற இந்திய அழகி மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா அவர்கள் மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்துவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கையில் தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டே அவர் மிஸ் யுனிவர்ஸ் அழகிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

நடிகை ஊர்வசி ரெளட்டாலா பாலிவுட்டில் பிரபலமாக இருந்தாலும் லெஜண்ட் சரவணன் நடிக்கும் தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் வெளியான பின் அவருக்கு தமிழ் திரையுலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment