close
Choose your channels

பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் தமிழ் நடிகை.. குஷ்பு மிஸ் ஆனது ஏன்?

Tuesday, January 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதமர் மோடி நேற்று பொங்கல் விழா கொண்டாடிய நிலையில் அதில் தமிழ் நடிகை ஒருவர் கலந்து கொண்டார். ஆனால் அதே நேரத்தில் இந்த விழாவில் நடிகை குஷ்பு கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

நேற்று நாடு முழுவதும் பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில் அரசியல் தலைவர்கள் பொங்கல் விழாவை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

அந்த வகையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் எல். முருகன் அவர்களின் வீட்டில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் நடிகை மீனா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணையவில்லை என்றாலும் இந்த விழாவில் கலந்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த விழாவில் மீனாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் தமிழக அரசியலில் பரபரப்பாக இருக்கும் நடிகை குஷ்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.