close
Choose your channels

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை!

Monday, March 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஒரு பிரபல நடிகை இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகை சஞ்சனாசிங் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ரேணிகுண்டா, அஞ்சான், தனி ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் இணைந்தது குறித்து நடிகை சஞ்சனா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘ நடிப்பின் மேதையான வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் ஒரு சிறந்த மனித நேயம் மிக்கவர் என்றும் அவரது அற்புதமான அனுபவங்கள் தனக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வடிவேலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை அளித்த இயக்குனர் சுராஜ்க்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஆர் விக்னேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.