close
Choose your channels
warrior
iravin_nizhal

திடீரென தாய்லாந்து பறந்த பிரபல நடிகை… வைரலாகும் கடற்கரை புகைப்படங்கள்!

Tuesday, May 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேன்ஸ் சர்வதேத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பிறகு பிரபல நடிகை ஒருவர் தாய்லாந்திற்குச் சென்று தன்னுடைய விடுமுறை நாட்களைக் கழித்து வருகிறார். அவர் பகிர்ந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை தமன்னா பாட்டியா முன்னதாக பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். மேலும் அங்கு சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்துகொண்ட அவர் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்ட நீண்ட கவுன் உடையை அணிந்திருந்தார். இது பார்வையாளர்கள் மனதை கவர்ந்திருந்தது.

முதல் முறையாக கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட தமன்னா பிறகு அங்கிருந்து தாய்லாந்து நாட்டிலுள்ள ஃபூகெட் எனும் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரை மணலில் ஓய்வெடுத்துவரும் அவர் ஊஞ்சல் கட்டி விளையாடி தன்னுடைய விடுமுறை நாட்களைக் கழித்து வருகிறார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்டதையடுத்து ரசிகர்கள் அப்புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் “F3: Fun and Frustration“ திரைப்படம் இந்த மாதம் 27 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதேபோல நாவசுதீன் சித்திக்குடன் இணைந்து “சூடியன்” எனும் திரைப்படத்திலும் ரித்தேஷ் தேஷ்முக்குடன் இணைந்து “பிளான் ஏ பிளான் பி“ எனும் திரைப்படத்திலும் இவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.