close
Choose your channels

வருங்கால கணவரை தான் நடித்த திரைப்படத்திற்கு அழைத்து சென்ற தமன்னா.. வைரல் வீடியோ..!

Thursday, May 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தமன்னா தனது வருங்கால கணவரை தான் நடித்த சூப்பர் ஹிட் படத்திற்கு அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுந்தர் சி இயக்கி நடித்த ’அரண்மனை 4’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ’அரண்மனை 4’ திரைப்படம் ஹிந்தியில் மே 31ஆம் தேதி அதாவது நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரிவியூ ஷோ மும்பையில் நடந்தது. இந்த காட்சிக்கு தனது வருங்கால கணவரான நடிகர் விஜய் வர்மாவை தமன்னா அழைத்துச் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இருவரும் நெருக்கமாக ஒருவருக்கொருவர் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்த நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக இந்த படத்தை ரசித்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது. ’அரண்மனை 4’ திரைப்படம் தமன்னாவின் திரையுலக வாழ்வில் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து அவருக்கு தமிழ், தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment