close
Choose your channels
iravin_nizhal
warrior

சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் தமன்னா: 4 நிமிட ஐட்டம் பாடலின் வீடியோ வைரல்!

Thursday, March 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட தொடங்கி விட்டார்கள் என்பதையும் குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் சமந்தா, ஆச்சார்யா திரைப்படத்தில் ரெஜினா, லெஜண்ட் சரவணன் படத்தில் லட்சுமிராய் உள்பட ஒரு சில நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’கானி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் தமன்னா ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாடலின் லிரிக் வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த பாடலின் முழு வீடியோ வெளியாகியுள்ளது.

புஷ்பா திரைப்படத்தில் சமந்தாவின் ஐட்டம் நடனத்துக்கு டஃப் க்கொடுக்கும் வகையில் தமன்னாவின் டான்ஸ் இந்த பாடலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நான்கு நிமிட பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது .

வருண் தேஜ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, சுனில் ஷெட்டி, நதியா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.