close
Choose your channels

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பள்ளி மாணவி பிரபல நடிகை… யார் என்று தெரியுமா?

Saturday, September 18, 2021 • தமிழ் Comments

நடிகர் தனுஷ் நடித்த “ஆடுகளம்“ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு. இந்தப்படத்தில் இடம்பெற்ற “வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?“ எனும் பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல தமிழ் இளசுகளின் நெஞ்சங்களில் அப்படியே ஒட்டிக்கொண்டார். பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான “ஆரம்பம்“ திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

அடுத்து “வந்தான் வென்றான்“, “காஞ்சனா 2“, “வை ராஜா வை“ போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார். இவர் பாலிவுட்டில் “பிங்க்“, “நாம் ஷாபனா“ போன்ற திரைப்படங்களில் நடித்தமைக்காகக் கொண்டாடப்பட்டார். அதோடு தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை டாப்ஸி பன்னு தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது பள்ளிப் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இரட்டை ஜடை போட்டுக்கொண்டு, வெள்ளைநிற பள்ளிச் சீருடையில் இவர் முதல் பரிசு பெறுவது போன்ற புகைப்படம் அதில் இடம் பெற்றுள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை டாப்ஸியா இது? என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை டாப்ஸி பன்னு நடிப்பில் உருவாகி இருக்கும் பேண்டஸி காமெடி திரைப்படமான “அனபெல் சேதுபதி“ திரைப்படம் நேற்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை டாப்ஸி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ள பள்ளிப் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz