close
Choose your channels
siren
lal_salaam

டி ராஜேந்தர் அறிமுகம் செய்த ஹீரோ மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி..!

Saturday, November 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் கங்கா மாரடைப்பால் சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 1983 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் கங்கா, நளினி நடிப்பில் வெளியான திரைப்படம் உயிருள்ளவரை உஷா. இந்த படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கங்கா, அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் சில படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தார். குறிப்பாக மாதவன் இயக்கிய ‘கரையை தொடாத அலைகள்’ உட்பட சில படங்களில் நடித்தார். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடிகர் கங்கா நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த கங்காவுக்கு வயது 63. நடிகர் கங்கா மறைவை அடுத்து திரையுலகினர் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் அவரது இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.