close
Choose your channels
Viruman
Laal

சுசீந்திரன் இயக்கும் பான் - இந்தியா திரைப்படம்: ஹீரோ யார் தெரியுமா?

Friday, May 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் ’வீரபாண்டியபுரம்’ மற்றும் ’குற்றம் குற்றமே’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். சுசீந்திரனின் அடுத்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது .

இந்த படத்தின் நாயகனாக பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும் மேலும் முக்கிய கேரக்டரில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சூப்பர்ஹிட்டான தெலுங்கு திரைப்படமான ’ஜாதி ரட்னலு’ என்ற படத்தில் நாயகியாக நடித்த ஃபரிதா அப்துல்லா இந்த படத்தின் நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது .

இந்த படத்திற்கான திரைக்கதை, வசனம் அமைக்கும் பணியில் தற்போது சுசீந்திரன் இருப்பதாகவும் மே 16-ஆம் தேதி தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், கோபிசெட்டிபாளையம், காரைக்குடி, கொடைக்கானல், ஊட்டி மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .

டி இமான் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் சக்கரவர்த்தி ஒளிப்பதிவும் அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்ய உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.