close
Choose your channels
aranmanai

சூர்யாவின் 'வாடிவாசல்: லண்டனில் ஆரம்பகட்ட பணிகள்.. படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் பிளான்..!

Thursday, June 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகி உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் லண்டனில் நடைபெற்று வருவதாகவும் கிட்டத்தட்ட இந்த பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்றும் படபிடிப்பை தொடர்ச்சியாக 10 மாதங்கள் நடத்தி முடித்துவிட்டு அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணியில் இருக்கும் வெற்றிமாறன் அந்த படத்தை முடித்தவுடன் ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபடுவார் என்றும் அதேபோல் ’கங்குவா’ படத்தை முடித்தவுடன் நடிகர் சூர்யா ’வாடிவாசல்’ படத்தில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment