close
Choose your channels
PatamPoochi
mayoon

ஆஸ்கர் விருது பட்டியலில் இணைந்த சூர்யாவின் சூப்பர்ஹிட் படம்!

Friday, January 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆஸ்கர் விருது பட்டியலில் இணைந்த திரைப்படங்களின் தகவல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் சூர்யாவின் சூப்பர் ஹிட் திரைப்படம் அதில் உள்ளது என்ற தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ’ஜெய்பீம்’ என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சமீபத்தில் ஆஸ்கார் அமைப்பின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்திலும் இந்த படம் இடம் பெற்றது என்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த உலக அளவிலான கௌரவமாக கருதப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யாவின் ’ஜெய்பீம்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் 276 திரைப்படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில் சூர்யாவின் ’ஜெய்பீம்’ மற்றும் மோகன்லாலின் ’மரைக்கார்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளது தென்னிந்திய திரையுலகிற்கே பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சூர்யாவின் ‘சூரரை போற்று’ என்ற திரைப்படமும் ஆஸ்கர் விருது தகுதிப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.