close
Choose your channels
Por
Joshwa

சூர்யாவின் 'கங்குவா' தீபாவளி போஸ்டர்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Monday, November 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்த படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நடந்ததாகவும் அதில் சூர்யாவுடன் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட் கலைஞர்கள் நடித்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு ‘கங்குவா’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது. அதில் சூர்யா கையில் தீப்பந்தத்தை ஏந்தி இருக்கும் மாஸ் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.

அதுமட்டுமின்றி இந்த போஸ்டரில் இந்த திரைப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படம் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos