close
Choose your channels

சூர்யாவின் புதிய போஸ்டரில் முக்கிய அறிவிப்பு!

Thursday, October 21, 2021 • தமிழ் Comments

நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள ’ஜெய்பீம்’ என்ற திரைப்படம் வரும் நவம்பர் 2ம் தேதி தீபாவளி திருநாள் விருந்தாக அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமேசான் ப்ரைம் ட்விட்டர் தளத்தில் சூர்யாவின் ’ஜெய்பீம்’ குறித்த அட்டகாசமான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரில் நாளை அதாவது அக்டோபர் 22-ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே ’ஜெய்பீம்’ படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலரும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும், இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz