close
Choose your channels

கையில எடு பவர, துணிஞ்சு எடு பவர.. சூர்யாவின் 'ஜெய்பீம்' பாடல் வைரல்

Monday, October 18, 2021 • தமிழ் Comments

சூர்யா நடிப்பில் ஞானவேல் என்பவர் இயக்கத்தில் உருவாகிய ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ’பவர்’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

சீன் ரோல்டன் இசையில் அறிவு எழுதி பாடிய இந்த பாடல் ஆக்ரோஷமாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த பாடலை ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கையில் எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழி ஏதும் இனி இல்லை அத தவிர
மீட்டு எடு பவர
கேட்டு எடு பவர
வழி அதுதான் நம்மோட தல நிமிர

சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz