close
Choose your channels
Viruman
Laal

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

Tuesday, February 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட படங்களின் ரிலீஸ் தேதிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’, சிவகார்த்திகேயனின் ‘டான்’ உள்பட ஒருசில திரைப்படங்களில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக சற்றுமுன் வெளியாகியுள்ளது.

’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.