close
Choose your channels
siren
lal_salaam

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

Wednesday, July 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் ஒரு சில திரைப்படங்களை தமிழக அளவில் ரிலீஸ் செய்து வருகிறார் என்பதும் தெரிந்தது

அந்த வகையில் சாய் பல்லவி நடித்த ’கார்கி’ என்ற திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம்தான் வெளியிடுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

இந்த நிலையில் ’கார்கி’ படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் 138 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 18 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் சாய்பல்லவி, காளி வெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், ஜெயபிரகாஷ், லிவிங்ஸ்டன், கவிதாலயா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் டிரைலர் ரிலீசுக்கு பின் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.