close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

ஒரு நிமிஷம் அப்பாவ நினைச்சுக்கோ, தைரியம் தானா வரும்: சூர்யாவின் அடுத்த பட டிரைலர்

Thursday, July 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாய்பல்லவி நடிப்பில் உருவான ’கார்கி’ என்ற படத்தின் தமிழக திரையரங்கு ரிலீஸ் உரிமையை சூர்யாவின் 2டி நிறுவனம் பெற்றுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சாய்பல்லவியின் குடும்பம் இனிமையாக சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென சாய்பல்லவியின் தந்தையை போலீஸ் பிடித்துச் சென்று விடுகின்றனர். கைது செய்யப்பட்ட தந்தையை சாய்பல்லவி மீட்டாரா? அதற்காக அவர் எப்படி போராடினார்? என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு வசனமும் மனதில் பதியும்படி ஆழமாக எழுதப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக ’நீ யாரோட பொண்ணு! ஒரு நிமிஷம் அப்பாவ நினைச்சுக்கோ! தைரியம் தானா வரும்’ என்ற வசனம் டிரைலரின் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி, காளி வெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி, ஆர்எஸ் சிவாஜி, ஜெயப்பிரகாஷ் உட்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த திரைப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.