close
Choose your channels
PatamPoochi
mayoon

மீண்டும் இரட்டை வேடத்தில் சூர்யா?

Tuesday, November 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு இரட்டை வேடம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு ஒருசிலர் நெகட்டிவ் விமர்சனங்கள் தந்தாலும் இந்த படம் குடும்ப ஆடியன்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதும் அதுமட்டுமின்றி மிகப்பெரிய வசூலைக் குவித்து உள்ளதால் சூர்யா - சிறுத்தை சிவா படத்திற்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்றும் விரைவில் இந்த படம் தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான் உள்பட ஒரு சில திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் சூர்யா நடித்துள்ளார் என்பதும் அவர் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.