close
Choose your channels
warrior
iravin_nizhal

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் சூர்யாவின் காட்சிகள் எத்தனை நிமிடங்கள்? 

Wednesday, May 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படத்தில் சூர்யா நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சூர்யாவின் காட்சிகள் இந்த படத்தில் எத்தனை நிமிடங்கள் உள்ளன என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூன்று ஜாம்பவான்கள் நடிப்பில் உருவான திரைப்படம் ’விக்ரம்’. அனிருத் இசையில் உருவான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இந்த படத்தில் மற்றொரு நடிப்பு ஜாம்பவானான சூர்யாவும் இணைந்து உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது .

இந்த நிலையில் சூர்யா இந்த படத்திற்காக இரண்டு நாட்கள் நடித்து கொடுத்ததாகவும் அவர் நடித்த காட்சிகள் 10 நிமிடங்கள் திரையில் தோன்றும் என்றும் அவருடைய கேரக்டர் படத்தின் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்த போது எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் உடனடியாக படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கமல்ஹாசனின் ’மன்மதன் அன்பு’ என்ற திரைப்படத்தின் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக தனது திரையுலகின் மானசீக வழிகாட்டியான கமல்ஹாசனின் படத்தில் மீண்டும் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.