close
Choose your channels
Don
Nenjukku Needhi

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி இதுவா?

Tuesday, October 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசம்பர் 17ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே தீபாவளி திருநாளில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அண்ணாத்த’ ரிலீசாக உள்ளது என்பதும் இதனை அடுத்து கிறிஸ்மஸ் திருநாளை ஒட்டி ‘எதற்கும் துணிந்தவன்’ படமும், பொஙக்ல் தினத்தில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படமும் ரிலீசாகும் என்று கூறப்படுவதால் அனைத்து திருவிழா காலத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களே வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.