கொரோனா பாதிப்புக்கு பின் ஜோதிகாவுடன் சூர்யா கலந்து கொண்ட நிகழ்ச்சி!
நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார் என்றும் அதன் பின்னர் எடுத்துக்கொண்ட சிகிச்சையின் காரணமாக கொரோனாவில் இருந்து குணமாகினார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சூர்யா நடிக்கவிருக்கும் 40வது திரைப்படமான ’சூர்யா 40; என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிக விரைவில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் இந்த படத்தை பாண்டியராஜ் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பின் தற்போது முதல் முறையாக சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். சென்னை பாலவாக்கம் என்ற பகுதியில் நடந்த பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிகாவுடன் சூர்யா கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் அந்த பள்ளியை சூர்யாவும் ஜோதிகாவும் சுற்றிப்பார்க்கும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Exclusive video #Suriya #Jyotika recent video in palavakkam school pic.twitter.com/lVLpDtrf1f
— Rithika _ official (@RithikaRithi3) March 8, 2021