close
Choose your channels
Viruman
Laal

சூர்யா-பாலா படம் குறித்த முக்கிய தகவல்: ரசிகர்கள் குஷி!

Wednesday, May 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு 34 நாட்கள் நடைபெற்று உள்ள நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர் .

இந்த நிலையில் ’சூர்யா 41’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இதனை அடுத்து ஜூன் மாதம் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், சூர்யாவின் தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜூவும் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.