close
Choose your channels
ZEBRA

'சூர்யா 45' படப்பிடிப்பு எப்போது? ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து..!

Wednesday, November 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க உள்ளார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் சூர்யா தற்போது பிஸியாக உள்ளார். இந்த புரமோஷன் பணிகளை முடித்தவுடன், ’கங்குவா’ ரிலீஸ் ஆனவுடன் 'சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதாவது நவம்பர் மூன்றாவது வாரத்தில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற இருப்பதாகவும், இது ஒரு ஆன்மீகம் சார்ந்த பேண்டஸி என்டர்டெயின்மென்ட் படம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 44வது படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ’சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதால், அடுத்த ஆண்டு சூர்யா ரசிகர்களுக்கு ’சூர்யா 44’ மற்றும் ’சூர்யா 45’ என இரட்டை விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'ரோலக்ஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment