close
Choose your channels
Viruman
Laal

'சூர்யா 41' படத்தின் டைட்டில் இந்த இரண்டில் ஒன்று தான்!

Wednesday, June 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 41’ என்ற படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே முடிந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ’சூர்யா 41’ படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்திற்காக இரண்டு டைட்டில்களை படக்குழுவினர் முடிவு செய்து வைத்திருப்பதாகவும், அவற்றில் ஒன்றை தேர்வு செய்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த டைட்டில்கள் ’வணங்கான்’ மற்றும் ’கடலாடி’ என்று கூறப்படுகிறது.

இந்த படம் மீனவர்கள் பிரச்சினை குறித்து அலசும் படம் என்றும் இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு கேரக்டர் மாற்றுத்திறனாளி கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. சூர்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் இந்த படம் ஜிவி பிரகாஷ் இசையில், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் தயாராகி வருகிறது. ‘சூர்யா 41’ திரைப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ’சூர்யா 41’ படத்தை முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்ல் ஒரு படமும், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ படத்திலும் நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.