close
Choose your channels
Viruman
Laal

3 நடிகர்கள், 3 நடிகைகள், ஒரு நடன இயக்குனர், ஒரு ஆங்கர்: சர்வைவர் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்! 

Sunday, August 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக ‘சர்வைவர்’ என்ற புதிய நிகழ்ச்சி விரைவில் ஜீ டிவியில் ஆரம்பமாகப் போகிறது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒரு தனித்தீவில் விடப்படுவார்கள் என்றும் அங்கு பலவிதமான சவால்கள் கொடுக்கப்படும் என்றும் ஒருவரோடொருவர் போட்டியிட்டு அதற்கான பரிசுகளை வென்று போட்டியிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமென்பதே நிகழ்ச்சியின் விதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 8 பேர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 நடிகர்கள், 3 நடிகைகள் மற்றும் ஒரு நடன இயக்குனர், ஒரு தொகுப்பாளர் என்பது குறிப்பிடதக்கது

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் விவரம் இதோ:

1. நடிகர் உமாபதி ராமையா (நடிகர் தம்பி ராமையா மகன்)

2. நடிகர் விக்ராந்த்

3. நடிகர் நந்தா

4. நடிகை காயத்ரி ரெட்டி ( பிகில் பட நடிகை) 

5. நடிகை விஜயலட்சுமி

6. நடிகை ஸ்ருஷ்டி டாங்கே

7. நடிகர் பெசண்ட்  ரவி

8. தொகுப்பாளினி பார்வதி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.