close
Choose your channels
sisa

இந்தியில் ரீமேக் ஆகும் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம்

Tuesday, August 8, 2017 • தமிழ் Comments

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமான' சி 3' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து நல்ல வசூலை குவித்த நிலையில் தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இந்த படத்தை இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஜீவா நடித்த 'யான்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூர்யாவின் வேடத்தில் சன்னிதியோல் நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் தாக்கூர் அனூப் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார். நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே சூர்யாவின் 'சிங்கம்' மற்றும் சிங்கம் 2' படங்கள் இந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் ரீமேக் ஆகியிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகமும் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz