close
Choose your channels
cred

பேரனுக்காக குழந்தையாகவே மாறிய சுரேஷ் தாத்தா: வைரல் வீடியோ

Friday, January 22, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி, இளம் போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தார் என்பதும் அவருடைய திறமையான விளையாட்டை பார்த்து சக போட்டியாளர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள் என்பதும் அதே நேரத்தில் பார்வையாளர்களுக்கு அவர் அதிக அளவில் கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திடீரென அவர் நான்காவது வாரமே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு குவிந்தது என்பதும் அனைவரும் அவரை சுரேஷ் தாத்தா’ என்று அன்புடன் அழைத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரசிகர்களால் தாத்தா என்று அழைக்கப்படும் சுரேஷ், உண்மையிலேயே தாத்தா என்பதும் அவர் தனது பேரனுடன் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது பேரனுக்காக குழந்தையாகவே மாறி விளையாட்டு காண்பிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சி மிகவும் க்யூட்டாக இருப்பதாகவும், இதை பார்க்கும்போது தாத்தா பேரன் போலவே தெரியவில்லை, இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பது போல் தெரிவதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான சுஜாவருணே இதுகுறித்து கூறியபோது, தாத்தா மற்றும் பேரன் ஆகிய இருவரின் புன்னகை எனது இதயத்தை தொட்டு விட்டது என்று பதிவு செய்துள்ளார்

Get Breaking News Alerts From IndiaGlitz