close
Choose your channels

ரஜினிகாந்த் வாழ்த்துவார் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை: குக் வித் கோமாளி பிரபலம் நெகிழ்ச்சி

Sunday, November 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், தற்போது திரையுலகில் பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புகழ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பல திரையுலக மற்றும் சின்ன திரை உலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆடியோ மூலம் புகழுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புகழ் உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் என ஆடியோ மூலம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகழ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. என் தலைவன் வாழ்த்துக்களோட இந்த நாள நான் தொடங்கறேன். திரை உலகிற்கு வருவதற்கே அவர் ஒரு ரோல் மாடல் எனக்கு. அப்படி அவர பார்த்து ரசிச்சு வளர்ந்த எனக்கு அவர் வாயால வாழ்த்து சொல்லி இருக்கிற மகிழ்ச்சிய எப்படி வெளிப்படுதறதுனு தெரியல. இப்படி ஒருநாள் என் வாழ்க்கைல வரும் னு நான் கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்லை. நான் எந்த இடத்துக்கு போனாலும், அவருக்கு இருக்கிற ரசிகர்கள்ல நானும் ஒருத்தன் அது தான் எனக்கு பெருமை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அன்பும், நன்றிகளும் மக்களே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.