close
Choose your channels
Viruman
Laal

'சொல்லி அடிச்சிருக்கார்: சிறுத்தை சிவா குறித்து ரஜினிகாந்த்!

Monday, November 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’விஸ்வாசம்’ போல ஒரு படம் வேண்டும் என இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கேட்டேன் என்றும் அவரும் சொல்லி அடிச்சிருக்கார்’ என்றும் ரஜினிகாந்த் தனது மகளின் செயலியில் குரல் வடிவில் ஆடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பல விமர்சகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தந்த போதிலும் பொதுமக்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகளின் செயலியில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது: ’விஸ்வாசம்’ போல் ஒரு கதை இருந்தால் கூறுங்கள் என இயக்குனர் சிவாவிடம் கூறினேன். அவரும் ’அண்ணாத்த’ கதையை கூறினார். எனக்கு மிகவும் பிடித்தது. அதை அப்படியே எடுக்க வேண்டும் என்றேன். ஆனால் அவர் அதை விட சிறப்பாக எடுத்துள்ளார் என்று கூறினார் 

மேலும் இன்னொரு பதிவில் ’வில்லேஜ் கேரக்டர், நல்ல கதை, அது இரண்டும் இரண்டும் போதும் என்று சொன்னார் சிவா. ’அண்ணாத்த’ படத்தோட கதையை சொல்லச் சொல்ல கிளைமாக்ஸ் வரும் போது என் கண்ணை கலங்கிவிட்டது. அப்படியே அவருக்கு கைகொடுத்து இதே மாதிரி படம் எடுங்க என்று சொன்னேன்’ என்று கூறினார். மேலும் ’சார் இந்த படம் வந்ததும் உங்கள் ரசிகர்கள் மட்டுமில்லாமல் எல்லோரும் பார்ப்பார்கள் என்று சொன்னார், அதே மாதிரியே சொல்லி அடித்திருக்கிறார்’ என்று ரஜினிகாந்த் அதில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.