close
Choose your channels

நயன் திருமணத்தில் கலந்து கொண்ட ரஜினி உள்பட 2 சூப்பர் ஸ்டார்கள்

Thursday, June 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதாகவும் திரையுலக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்வதற்காக மும்பையிலிருந்து சென்னை வந்ததாகவும் அவர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் சென்னை வந்தது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.